P.S I HATE YOU – SCREENPLAY

P.S I HATE YOU (SHORT FILM)

SCENE 1:

ECR ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடத்தில், ஏதோ ஒரு தளத்தில் , ஜன்னல் ஓரத்தில் நின்று, கட்டிடம் அருகே உள்ள ரோட்டை வேடிக்கைப்பார்த்து  கொண்டு புகை பிடித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.

(BACKDROP VOICE FOR THIS SCENE)

என் பேரு கார்த்திக்.

நான் ஒரு CIVIL ENGINEER.

நான் ஒரு CIVIL ENGINEER அப்படின்னு INTRODUCE பண்ணிக்கிறத விட CHAIN SMOKER சொன்னா கரெக்டா இருக்கும்.

ஏன்னா ,

மக்கள் இருக்கிற பொது இடத்துல , வேல பாக்குற இடத்துல , ஏன் என் வீட்ல … எல்லா இடத்துலயும் cigarette பிடிப்பேன்.

என் wife கூட கேட்பா. எதுக்கு எப்போ பாத்தாலும் cigarette பிடிக்குறீங்கனு?

அதுக்கு நான் சொல்ற reason , ரிலாக்ஸ் பண்றதுக்கு(பொது இடத்துல) , வொர்க் டென்ஷன குறைக்கிறதுக்கு (வேலை பாக்குற இடத்துல) , FUTURE பத்தி கவலை படறதுனால(வீட்ல) CIGARETTE பிடிக்குறேனு.

நான் CIGARETTE பிடிக்கிறதனால மத்தவங்களுக்கு கஷ்டமா இல்லையானு எனக்கு தெரியாது. அத பத்தி எனக்கு கவலையும் இல்ல.

ஏன்னா என்ன மாதிரி இந்த நாட்ல கோடிக்கணக்கான பேர் cigarette பிடிக்கிறான். நான் இந்த சமூகத்த சீரளிக்கிறவன்னா.. அந்த கோடிக்கணக்கான பேரும் இந்த நாட்ட சீரளிக்கிறவங்க தான்.

( இது தான் கார்த்திக் பற்றிய அறிமுக காட்சி

SCENE 2 :

கார்த்திக் மருத்துவமனை முன் நின்று புகை பிடித்துக்கொண்டிருந்தான்.

(BACKDROP VOICE FOR THIS SCENE)

( டாக்டர பார்க்க வந்தன்.

ஒரு ரிப்போர்ட் வாங்க.

இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்னு சொல்லிடாங்க.

அதான் அது வரைக்கும் ரிலாக்ஸ் பண்ண cigarette பிடிச்சிட்டு இருக்கன். )

வேடிக்கைப்பார்த்துக்கொண்டு புகையை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டிருந்தான் கார்த்திக். அப்பொழுது அவன் கைப்பேசியில் அழைப்பு வந்தது. டாக்டர் தான் அழைத்தார்.

டாக்டர் : கார்த்திக் ரிப்போர்ட் ரெடி, உள்ள வாங்க.

ஓகே டாக்டர் ! தோ வரன் என்று சொல்லி அவசர அவசரமாக கையில் இருந்த சிகரெட்டை பஞ்சு வரை இழுத்து கீழே போட்டு விட்டு உள்ளே சென்றான்.

SCENE 3:

டாக்டர் எதிரே அமர்ந்திருந்தான் கார்த்திக். கையில் இருந்த ரிப்போர்ட்டை சரி பார்த்து விட்டு கார்த்திக்கை நோக்கி நீட்டினார் டாக்டர். அதை வாங்கிய கார்த்திக் ரிப்போர்ட்டில் இருந்தது எதுவும் புரியாததால் புரட்டிப்பார்த்து விட்டு டாக்டரிடம்

கார்த்திக்: டாக்டர் எனக்கு எதும் புரியல. ரிப்போர்ட்ல என்ன வந்திருக்கு.

டாக்டர் அதற்கு “ Im sorry கார்த்திக் .Its cancer” என்றார்.

ஒரு கணம் திகைத்து போய் அமர்ந்திருந்தான் கார்த்திக். பேச்சு வரவில்லை

SCENE  4 :

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தான் கார்த்திக்.

கையில் ரிப்போர்ட். முகத்தில் சோகம்.

என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டை நோக்கி நடக்க ஆரமித்தான்.

வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டில் மனைவி மற்றும் அவனின் உயிருக்கும் மேலான குழந்தையை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்ற எண்ணம் மட்டும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

கொஞ்ச தூரம் நடந்த பின் கைப்பேசியில் அழைப்பு வந்தது..மனைவியிடம் இருந்து….

மனைவி: எங்க இருக்கீங்க?

கார்த்திக் : வீட்டு பக்கத்துல தான் வந்துட்டு இருக்கன். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவன்.

நானும் குழந்தையும் வீட்டு பக்கத்துல இருக்கிற பார்க்ல இருக்கோம்.அங்க வந்துடுங்க என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

SCENE 5:

பத்து நிமிடத்தில் பார்க் அருகே வந்து சேர்ந்தான் கார்த்திக்.

பார்க்கின் வெளிப்புற சுவர் அருகே நின்று தன் மனைவி மற்றும் குழந்தை எங்கிருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டான்.

குழந்தை பந்து ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள், அதை சற்று தொலைவில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் அவன் மனைவி.

அந்த காட்சியை பார்த்து ரசிக்க முடியாதவனாய் முகத்தில் சோகத்துடன் நின்றிருந்தான் கார்த்திக்.

எப்படியும் மனைவி, குழந்தையை பார்த்தாக வேண்டும், பேச வேண்டும். வேறு வழியே இல்லை. அதனால் பார்க் உள்ளே செல்ல தயாரானான். கையில் இருந்த ரிப்போர்ட்-ஐ மடித்து பாக்கெட்டில் வைத்துவிட்டு உள்ளே மெதுவாக நடந்து சென்றான் மனைவியை நோக்கி.

கார்த்திக் வந்ததை அவன் மனைவி கவனிக்கவில்லை.குழந்தை விளையாடுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். நடந்து சென்று அவள் அருகில் அமர்ந்தான்.

யாரோ பக்கத்தில் அமர்வதை உணர்ந்து திரும்பியதும், கார்த்திக்கைப் பார்த்து சிரித்தபடி

“எப்போ வந்தீங்க, நான் பாக்கல”

“இப்போ தான் வந்தன்” என்றான் பதிலுக்கு அவளை பார்த்து சிரிக்க முடியாமல்.

கார்த்திக்கின் முகம் எப்போதும் போல் இல்லாமல் வாடிப்போயிருந்ததை உணர்ந்த அவள் ,

“ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?

‘ஒண்ணும் இல்ல! site-ல கொஞ்சம் வேலை அதிகம் . அதான் work tension-ல face அப்படி இருக்கு’

வொர்க் டென்ஷன்னா தான் நீங்க cigarette எடுத்து  பத்தவச்சு ஊத ஆரமிச்சுடுவீங்களே ? என்ன இன்னும் பத்த வைக்கல என்றாள் விளையாட்டாக

இப்படி அவள் கேட்டதும் அதிர்ந்து போன அவன் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான்.

அந்த நேரம் சற்று தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கார்த்திக்கைப் பார்த்து , தந்தை வந்துவிட்ட சந்தோஷத்தில் இவனை நோக்கி ஓடி வந்தாள்.

அருகில் வந்ததும் சிரித்துக்கொண்டே “ அப்பா” என்றாள்.

அவள் முகத்தை பார்க்க முடியாதவனாய் மௌனமாக அமர்ந்திருந்தான்.

இவனை பார்த்து புரிந்துகொண்ட குழந்தை

“ஏன் சோகமா இருக்கீங்க” என்றாள்.(குழந்தைகள் தான் நாம் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்று எளிதாக புரிந்துகொள்வார்களே)

அதற்கு கார்த்திக் “ அப்பா தப்பு பண்ணிட்டேன் மா! என்ன மன்னிச்சிடு!!! SORRY!!!!” என்றான்.

அவனை சந்தோஷப்படுத்த அவள் “ நீங்க SORRY கேட்டீங்க! நான் உங்கள மன்னிச்சிட்டேன் ! என்றாள் விளையாட்டாக.

அவள் அப்படி சொல்வாள் என்று சற்றும் எதிர் பார்க்காத கார்த்திக்கின் கண்கள் லேசாக கலங்கியது.

அப்போது டாக்டரிடம் பேசியது அவன் கண் முன்னே ஓடத்தொடங்கியது.

HOSPITAL SCENE (flashback)

கார்த்திக்: டாக்டர் எனக்கு எதும் புரியல. ரிப்போர்ட்ல என்ன வந்திருக்கு.

டாக்டர் : வீட்ல இருக்கும்போது நிறைய சிகரெட் பிடிப்பீங்களா?

கார்த்திக் : ஆமா டாக்டர் ! நிறைய பிடிப்பேன்.

டாக்டர் : எதுக்காக?

கார்த்திக் : இல்ல டாக்டர் ! sometimes work tension இருக்கும் , அதனால

டாக்டர் : வீட்ல சின்ன குழந்தை இருக்கு . நீங்க படிச்சவர்தான , வீட்ல சிகரெட் பிடிக்ககூடாதுனு தெரியாதா உங்களுக்கு? நீங்க சிகரெட் பிடிச்சதுனால உங்க பொண்ணு தான் பாதிப்படஞ்சிருக்காங்க.

கார்த்திக் : என்ன டாக்டர் சொல்றீங்க, அவளுக்கு ஒண்ணும் இல்லையே?

டாக்டர் : “ Im sorry கார்த்திக் . Its cancer”. அதனால தான் குழந்த மயக்கம் போட்டு விழுந்துருக்கா. (கார்த்திக் டாக்டர் சொல்வதை நம்பமுடியாமல் வாயடைத்து போய் அமர்ந்திருந்தான்).

டாக்டர் : இது passive smoking-னால வர childhood cancer. குழந்தைங்களுக்கு நம்ம மாதிரி mature immune system கிடையாதனால அவங்க ரொம்ப easy-ஆ affect ஆவாங்க. அதானால தான் உங்க குழந்தையும் affect ஆகியிருக்காங்க.

கேட்பது எல்லாம் புதிதாக இருப்பதால் பேச முடியாமல் இருந்தான் கார்த்திக்.

டாக்டர் : அவ மயக்கம் போட்டது எல்லாருக்கும் தெரியுமா?

கார்த்திக் : இல்ல டாக்டர். அன்னைக்கு நான் மட்டும் தான் இருந்தேன். என் wife வெளில ஒரு வேலை விஷயமா போயிருந்தாங்க. so யாருக்கும் தெரியாது இது நடந்தது.

டாக்டர் : உங்க மனைவிகிட்ட பொறுமையா சொல்லி புரியவைங்க , வேற வழி இல்ல.

இப்படி டாக்டரிடம் பேசியவை அவன் கண் முன்னே வந்து சென்று மறைந்தது.

CLIMAX SCENE:

குழந்தை எதுவும் தெரியாமல் அவன் அருகே நின்று முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் மெல்லிய சிரிப்புடன்.

கார்த்திக்கின் முகம் மாறவில்லை.

பொழுது சாய்ந்திருந்தது. வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து மூவரும் மெதுவாக நடக்க ஆரமித்தார்கள் பார்க்கில் இருந்து.

பார்க் வெளிப்புற சுவர் அருகே சென்றதும் ஏதோ யோசித்து அவன் மனைவி கார்த்திக்கிடம்

“ஏங்க கைல எடுத்துட்டு வந்த எதாவது மறந்து வச்சிட்டு வர்றீங்களா, எல்லாம் எடுத்துடீங்கல, எதுவும் விட்டுட்டு வரலையே? என்றாள்.

அதற்கு பதிலாக “இல்லை” என்றான்.

குழந்தையின் கை பற்றிகொண்டே நடந்து கொண்டிருந்த கார்த்திக் , அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை திரும்பி பார்த்தான்.

அவன் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருக்கும் cigarette packet அங்கே கிடந்தது.

 

 

9 thoughts on “P.S I HATE YOU – SCREENPLAY

  1. Vanakkam nambare… Mannikkavum.. ithu thiraikadhai illai kadhai.. thiraikadhai enbathu mutrilum veru mathiri anavai… Anal ungalaukku kadhai , kadhaiil varum thiruppangal anaithu nandragave irukkirathu.. mikavum makizhchi ungaladim irunthu nalla kadhaikal vara vendum.. kandippa varum endra nambikkaiyum irukkirathu… Tamilil varum thiraikadhaikal vida English padangalil varum thiraikadhaikal padiungal… Nandri

    Liked by 1 person

  2. திரைக்கதை எழுதுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு நண்பரே !! நீங்கள் கூறுவதையும் நான் ஏற்கிறேன்..மிகவும் நன்றி நேரம் ஒதுக்கி படித்ததற்கு ..நிறைய கதைகள் வர உள்ளன ..நன்றி

    Like

Leave a comment